தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மே, 2015

உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்கும் கண்ணாடி!



கணனி மென்பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஒருவர் நினைப்பதை தெளிவாக காட்டும் மூக்கு கண்ணாடியை உருவாக்கியுள்ளது.இந்த கண்ணாடியில் பல நுண்ணுர்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடி மூலம் காணப்படுபவரின் உடல் வெப்பத்தைக் கூட எளிதாக அறிய முடியும்.
மேலும், எதிரில் உள்ள ஒரு நபரின் செய்கைகள், குரல் ஆகியவற்றை மைக்ரோசாஃப்டின் இணையத் தகவல் சேமிப்பகத்துக்கு அனுப்பி உடனுக்குடன் ஆய்வு செய்து, அவரது எண்ணங்கள் குறித்த தகவல்கள் மூக்குக் கண்ணாடி அணிந்தவருக்கு அளிக்கப்படுகிறது.
இதில் உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள், வெவ்வேறு வகையான எண்ணங்களையும் சரியாக வேறுபடுத்தி, தகவல் அளிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த கண்ணாடிக்கு காப்புரிமை பெற, கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் மைக்ரோசாஃப்ட் விண்ணப்பித்தது.
இருப்பினும் இந்த மூக்குக் கண்ணாடி விற்பனைக்கு வருமா என்பது குறித்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக