தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 மே, 2015

அடிக்கடி தூக்கம் வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்

மனிதனுக்கு உணவு ,நீர், காற்று ஆகியவை எப்படி இன்றியமையாததோ அது போல் தூக்கமும் முக்கியமான ஒன்று.
எந்நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்களுக்கு தூக்கம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
இந்த நவீன காலத்தில் தூங்காமல் எப்போதும் வேலையே கதி என்று இருப்பவர்களுக்கு ஏராளமான நோய்கள் வரும் என்பது நம் அனைவருக்கு தெரியும்.
ஆனால் எந்நேரமும் தூங்கிக்கொண்டே இருப்பதும் ஒரு நோய்தான் என்பது எத்தனைபேருக்கு தெரியும்.
நீங்கள் வேலை செய்யும்போது இடையே அடிகடி தூக்கம் வருகிறதா! அப்படி என்றால் அது நார்கோலெப்ஸியின் அறிகுறியாக இருக்கலாம்.
நார்கோலெப்ஸி(Narcolepsy) என்றால் என்ன?
ஒரு மனிதன் தேவைக்கு அதிகமாக (அதாவது திடீர்திடீரென ) தூங்குவதைதான் நார்கோலெப்ஸி என அழைக்கின்றனர்.
அறிகுறிகள்
10 முதல் 25 வயது வயதுக்குட்பட்ட காலங்களில் இதன் அறிகுறிகள் காணப்படும், முதல் 5 வருடங்களுக்கு மோசமாக இருக்கும் இந்த வியாதி, பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர ஆரம்பிக்கும்.
நீங்கள் ஒரு வேலை செய்துகொண்டு இருப்பீர்கள் திடீரென அப்படியே தூங்கி விடுவீர்கள் . இந்த தூக்கம் சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை கூட நீளும்.
உங்கள் உடல் அதன் உணர்வை இழக்கும். இந்த நிலையை கேட்டப்ளெக்ஸி என கூறுகின்றனர். அதாவது அதீத மகிழ்ச்சி , துக்கம் அல்லது கோபம் ஆகியவை நிகழும் போது உங்கள் உடல் தானாகவே அதன் உணர்வை இழக்கும்.
இதற்கு கேட்டப்ளெக்ஸி(Cataplexy ) என்று பெயர், உங்களில் நிலை அறிந்தாலும், செயல்படமுடியாது.
நீங்கள் தூக்கத்தில் இருந்தாலும் விழித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஸ்லீப் பராலிசிஸ் (Sleep paralysis) தூங்க ஆரம்பிக்கும்போதே கை, கால்களை நகர்த்த முடியாமை. ஆனால், இவர்களுக்கும் தன்னைச் சுற்றிலும் நடக்கிற விடயங்கள் எல்லாம் தெரியும்.
ஹிப்னாகோகிக் ஹாலுசினேஷன் (Hypnagogic hallucinations ) தூங்க ஆரம்பிக்கும் போது, கண் முன்னே யாரோ நடமாடுவது போலவும், ஏதோ சம்பவங்கள் நடப்பது போலவும் உணர்வார்கள்.
பொதுவாக நம் தூக்கம் இரண்டு நிலைகளை கொண்டது. அதாவது நாம் தூங்க ஆரம்பித்த சில நேரங்கள் நம் மூளை மெதுவாக வேலை செய்யும்(non-rapid eye movement).
பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அதன் செயல்பாடு அதிகரிக்கும் நாம் கனவு காண்பது கூட இந்த நிலையில் தான்(rapid eye movement).
ஆனால் நார்கோலெப்ஸியால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் நிலையான தூக்கத்தை சந்திக்காமல் நேரடியாக இரண்டாம் நிலைக்கு சென்று விடுவார்கள்.
இது உங்கள் மூலையின் செயல்பாட்டை குறைய செய்யும்.
சிகிச்சைகள்
பொதுவாக இந்த நோயை குணப்படுத்த முடியாது. ஆனால் நம் கட்டுக்குள் வைக்கலாம்.
மருந்துகளின் மூலமும், பழக்க வழக்கங்கள் மூலமும் இந்த நோயை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
பொதுவாக மருந்துகள் மூலம் மத்தியநரம்பு மண்டலத்தை தூண்டுவதே நார்கோலெப்ஸி நோய்க்கானமுக்கிய சிகிச்சையாகும்.
மேலும் மொடபினில்(modafinil) அல்லது அர்மொடபினில்(armodafinil) என்ற சிகிச்சை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.
சில சமயங்களில் மொடபினில் மேற்கொள்வதால் தலைவலி, வாந்தி போன்ற பக்கவியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிலருக்கு மெத்தில்பினிடேட்(methylphenidate) போன்ற மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இது நரம்புதளர்ச்சி, இதயக்கோளாறு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதிகமான வேலைப்பளு , மன அழுத்தம், உடற்பயிற்சி ஆகியவைகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் காபி, நிக்கோட்டின் போன்றவற்றை உட்கொள்வதை குறைக்க வேண்டும்.இதன் மூலமாக இந்த நோயை நாம் ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக