இரண்டே நிமிடங்களில் சுடச்சுட, மிகவும் ருசியாக தயாராகும் நூடுல்ஸை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.
ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சிலவகை நூடுல்ஸ்களில் மெழுகு அல்லது லிக்விட் பாரஃபின் என்ற பொருட்கள் நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக சேர்க்கப்படுகிறது.
நம் உடலுக்கு வரும் வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவற்றை நூடுல்ஸில் சேர்க்கப்படும் மெழுகு உறிஞ்சி உடலில் தங்க விடாமல் செய்துவிடுகிறது.
மேலும், இதயம் சம்மந்தப்பட்ட நோய்களையும், அதிக ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற நோய்களையும் ஏற்படுத்திவிடுகிறது.
இதனால் மூளைத்தாக்கு நோய் (ஸ்ட்ரோக்), நீரிழிவு போன்றவை எளிதாக வருகின்றன.
நூடுல்ஸில் உள்ள மைதா, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் வர காரணமாக அமைகிறது.
நூடுல்ஸில் வெள்ளை நிறத்துக்காக சேர்க்கப்படும் பிளீச்சிங் பொருளான அலோக்ஸான் (alloxan) கணைய சுரப்பிகளில் இன்சுலினை சுரக்கச் செய்வதை பாதிப்படையச் செய்து நீரிழிவு நோய் வருவதற்கு வழிவகுக்கிறது.
இதற்கு பதிலாக இயற்கை முறையில் வரகு அரிசி, சாமை அரிசி, தினை அரிசி, கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் தயாராகின்ற நூடுல்ஸை சமைத்து சாப்பிடலாம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக