தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 மே, 2015

மதுபழக்கத்தை மறக்க கொய்யா சாப்பிடுங்க...!


பழங்களில் மிகுந்த வாசமும், ருசியும் உள்ள பழம் கொய்யா. இப்பழம் விலை குறைவானது. அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடிய பழம். கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கலைப் போக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை கொதிக்க காய்ச்சி, அந்த நீரில் கொப்பளிக்கலாம். கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகிறது.

கொய்யா மரத்தின் இளம் கிளைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகள் அல்சரை குணமாக்கும். கொய்யாப்பழத்தை கழுவிய பிறகு, பற்களால் கடித்து மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது. அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிடுவது நல்லது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியை நீக்கும். முதுமை தோற்றத்தை குறைத்து இளமை தரும்.

மது போதைக்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாவை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய் விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடும் முன், இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிடலாம். நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும்.

இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும்.

வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து, வாந்தி, மயக்கம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக