சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நாவிலும் எச்சில் ஊற வைப்பது மாங்காய்.
மாங்காயின் இலை, வேர், பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
மாங்காயின் மகத்துவங்கள்
மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. மாங்காயில் கலோரிகள் இல்லை.
எனவே இதனை எடையை குறைக்க நினைப்போர் அச்சமின்றி சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
இதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
மாங்காய் கல்லீரலுக்கு நல்லது. மாங்காய் சாப்பிடுவதன் மூலம் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலில் ஏதேனும் பாக்டீரியல் தொற்றுகள் இருந்தாலும் அதை சரிசெய்து, குடலை சுத்தப்படுத்தும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக