தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மே, 2015

பூணூல் அணிவதை எதிர்த்து காந்தியார் பதிவு செய்த கருத்து!



"இலட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமல் இருக்கும் போது அது எனக்கு அவசியம் என்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும் ;ஆத்மார்த்தீகமான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல்.

இன்றுள்ள இந்துக்கள், இந்து, இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலையும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்கள்தானா என்பது எனக்கு சந்தேகம்.
இந்து மதத்திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழியென்று எனக்குத் தோன்றவில்லை". (காந்தியார் சுயசரிதம் - பக்கம் 480)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக