தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 மே, 2015

அலர்ஜியால் அவதியா? இந்த பழத்தை சாப்பிடுங்க !

கண்ணை கவரும் நிறத்தில் இருக்கும் பப்பாயா உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.
பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது.
இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன.
பப்பாளியை சாப்பிட்டால் மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும். பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது.
பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர்.
மேலும் மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த மருந்தாகும்.
பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது.
இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை(Toxin) உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
மேலும், பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.
பப்பாளி ஜீஸ்
பழுத்த பப்பாளி பழம் – 1, பால் - 1 கப், சீனி - 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு அரைக்கவும்.
வெனிலா ஐஸ் க்ரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் வழங்குகிறது.
இதில் நியுட்ரியஸ் உள்ளதால் உடம்புக்கு நல்லது.
கொலஸ்ட்ரால் குறையும்.
அழகாக மாற ஆசையா
பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் மற்றும் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் பருக்கள், கரும்புள்ளிகள் மறையும்.
பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.
உங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக