தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 மே, 2015

கர்ப்ப காலத்தில் பரசிட்டமோல் பாவிக்கின்றீர்களா? ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து

எந்தவொரு உடனடி நோய்க்கும் அனைவரும் அதிகளவில் பயன்படுத்தும் நிவாரணியாக பரசிட்டமோல் காணப்படுகின்றது.
இப் பரசிட்டமோலை கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்துவதனால் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இக்காலப் பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ச்சியாக பரசிட்டமோலைப் பயன்படுத்துவதனால் டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் உற்பத்தில் 45 சதவீதத்தினால் குறைவடைகின்றதாகவும் இதனால் பிறக்கவிருக்கும் ஆண் குழந்தைகளில் இனவிருத்திக் கோளாறை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பிரித்தானியாவின் Edinburgh பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Rod Mitchell குறிப்பிடுகையில் “கர்ப்ப காலத்தில் பெண்கள் அவர்களுக்காக அக்காலப் பகுதியில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை வகைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு” அறிவுரை கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக