உலகத்தில் பலவித நோய்கள் இருந்தாலும் நம்மை மெதுவாக கொல்லும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோய் இருக்கிறது.
இது நாம் உண்ணும் உணவிற்கு ஏற்றவாறு தாக்கத்தைக் காட்டும். இதை ஆரம்பத்திலே கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.
இந்த நோயை தடுக்க உணவு முறையில் சில கட்டுப்பாடும், அதை தாண்டி சில வழிமுறைகளும் இருக்கின்றன. அதைப் பற்றி பார்க்கலாம்.
உடற்பயிற்சி
வாதம், மெட்டபாலிக் சிண்ட்ரோம், டைப் 2 சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை தடுக்க சீரான உடற்பயிற்சி என்பது அவசியமான ஒன்றாகும்.
உடற்பயிற்சி செய்யும் போது, எச்.டி.எல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் மேம்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற ட்ரைகிளிசரைடுகள் குறையும்.
இதனால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் இடர்பாடும் குறையும்.
உணவு கட்டுப்பாடு
கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த கொழுப்புகள் உடல் பருமன், தமனித் தடிப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
இத்தகைய கொழுப்புகள் விரும்பி உண்ணப்படும் ஜங்க் உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. ஜங்க் உணவுகளை உண்ணுவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான இடர்பாடுகள் அதிகம். எனவே முடிந்த வரை அவற்றை தவிர்த்திடவும்.
இரத்த சர்க்கரை மதிப்பீடு
35 வயதிற்கு பிறகு சீரான இடைவெளியில் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் எண்ணிக்கையை சோதித்துக் கொள்ளலாம்.
இதற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி மூலமாகவும், உணவுக் கட்டுப்பாடு மூலமாக சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட்டு வந்தால் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மன அழுத்தம்
இன்றைய காலக்கட்டத்தில் பல நோய்கள் உருவாவதற்கு மன அழுத்தம் காரணமாக இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கும் இது முக்கிய காரணமாக விளங்குகிறது.
தொடர்ச்சியான பயணம் மற்றும் சீரற்ற அலுவலக நேரம் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் உடலின் இயல்பு செயல்பாட்டை பாதித்து சர்க்கரை நோயையும் உண்டாக்குகிறது.
சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உங்கள் பாதங்களை தினமும் சோதனை செய்து கொள்ளுங்கள். பாதத்தில் புண் போன்றவை ஏற்பட்டால் அவற்றை சீக்கிரமாக கவனியுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக