உலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ சட்டிங் மென்பொருளான Skype போன்றே ஒலிபரப்பு சேவையை வழங்கிவரும் Sky நிறுவனத்தின் பெயர் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனம் குமிழிகள் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட லோகோவை அடிப்படையாகக் கொண்ட Skype எனும் பெயரை பதிவு செய்ய முற்பட்டுள்ளது.
இதற்கு எதிராக அமெரிக்க நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கினை விசாரித்த நீதிமன்றம் Skype எனும் பெயர் Sky எனும் பெயரைப் போன்றே காணப்படுவதாகவும், Sky லோகோவில் காணப்படும் நிறம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக Skype எனும் பெயரில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக