மட்டனை விரும்பி சாப்பிடும் அசைவப்பிரியர்களுக்காக ஸ்பெஷலான மட்டன் சால்னா இதோ,
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - 2 கிலோ வெங்காயம் - 300 கிராம் தக்காளி - 300கிராம் பச்சை மிளகாய் - 8 கெட்டித்தயிர் - 100 மில்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா(ஏலம் பட்டை,கிராம்புத்தூள்) - 1 டீஸ்பூன் ( விரும்பினால் அரை டீஸ்பூன் கூட்டிக் கொள்ளலாம்) மல்லி,புதினா நறுக்கியது தலா ஒரு கைப்பிடி கறி மசாலா தூள் - 4 -5 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் எண்ணெய் - 150 மில்லி தேங்காய் அரைக்க - முழு பெரிய காய் துருவியது + ஒரு கைப்பிடி முந்திரி பருப்பு. உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கறியை கொழுப்பு நீக்கி சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும். தேவையான பொருட்களை நறுக்கி தயார் செய்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரம் வைத்து எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தில் பாதி போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
தேங்காய் தவிர, கறி முதல் அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். நன்கு ஒரு சேர பிரட்டி விடவும். கறி மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து கொதிவரவும் மூடி போட்டு மீடியம் நெருப்பில் வேக விடவும். அரைமணி நேரத்தில் வெந்து விடும்.
அரைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.சிம்மில் வைக்கவும். சிம்மில் மூடி 10 நிமிடம் வைக்கவும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக