அன்பிற்குரிய நண்பர்களே,
வணக்கம்.
உலக அதிசயங்களில் ஒப்பற்ற தெய்வீகத் திருக்காட்சியாக,உலகம் யாவையும் தாமுளவாக்கி,இந்தப்பிரபஞ்சம் முழுதும்தன்னை வியாபித்துக் கொண்டு ஆனந்த தரிசனம் தந்துகொண்டிருக்கும் திருப்பதியாகத் திகழும் இமாலயத்தின்கைலாசத்தைக் கண்டு இன்புறும் பேறு நம்முள் எத்தனை பேருக்குக்கிடைத்திருக்கும்? கிடைக்கும்?
நமது ரிஷிகளும் முனிகளும் மாமன்னர்களும் தரிசித்துப் பேறுபெற்ற அந்தக் கைலாசத்தைக் காண நமக்குப் பணம் இருந்தால்மட்டும் போதாது;பாக்கியமும் இருக்க வேண்டும்.
ஈசனின் கருணையும் நாம் செய்த புண்ணியங்களின் பலனும் கைகூடி இருந்தால் ஒழிய அவன் குடி கொண்டிருக்கும் திருவிடத்தைத்தேடிச் சென்று தெய்வீகக் காட்சியாகக் காணும் பேறு நமக்குக்கிடைக்கவே கிடைக்காது.
அப்படியெல்லாம் இல்லாமல் இந்தப் புகைப்படங்களின் மூலம்அந்தக் கைலாஷ்பதி குடி கொண்டிருக்கும் அருள் தோற்றத்தைகூகுள் சாட்டிலைட் சானல் மூலம் Vidya Subramaniam என்கிறதிருமதி உஷா (Facebook நண்பர்) அவர்கள் தரிசித்திருக்கிறார்.
தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகெல்லாம் பெற்று நெகிழவேண்டும் என்பதற்காக கூகுள் மூலம் தான் மட்டுமே பெற்றகைலாஷ் நாதரின் தோற்றத்தை புகைப்படமாக முகநூலில்ஆன்மீக விருந்து படைத்துள்ளார்.
நம்புவோர் நம்புங்கள்.;
மயன் என்னும் தேவசிற்பி செதுக்கிய முகம்போல் கைலாசமுகடுகளுக்கு நடுவே ஓர் முகடை சிவபெருமானின் திருமுகமாகவடித்ததுபோல் தோன்றும் கைலாஷ் பதியின் காட்சி, நம்புவோரைமெய்சிலிர்க்க வைக்கும்.
அந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
உங்களுக்கு?
பார்த்து விட்டு எனக்கு எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை அரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.உங்கள் கருத்துக்களைஅவருக்கு முகநூல் மூலமே அனுப்புவுவேன்.
படங்களுடன் திருமதி உஷா சுப்பிரமணீயம் அவர்கள் ( முகநூலில்:Vidya Subramaniam) எழுதிய குறிப்பு இது:
// Google Earth ல் தினமுமே ஒரு முறை கயிலாயத்தை சுற்றி சுற்றிவந்து பார்த்து சிலிர்ப்பது என் வழக்கம். இன்று அவ்வாறு செய்தபோது இதுவரை காணாத அதிசயம் ஒன்று திடுமென என் முன்தெரிந்தது. கயிலையின் மேற்கு முகத்தில் சிவனின் முகம் மிகஅழகாகத் தெரிந்தது. புருவம், கண்கள் , புன்னகைக்கும் அதரங்கள்ஜாடாமுடி, தோள்கள் என கம்பீரமான சிவனின் தோற்றம்தெரிந்ததும் அதிர்ந்து போனேன் ஒரு வினாடி. என் தேகம்சிலிர்த்தது. இக்காட்சி இதுவரை நான் காணாதது. மிகவித்தியாசமாகத் தெரிந்த இந்த அபூர்வ கட்சியை நீங்களும்காணவேண்டும் என விரும்புகிறேன்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
-Vidya Subramaniam @ Facebook on 16.8.2014 //
அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
http://ulagathamizharmaiyam.blogspot.nl/2014/08/blog-post_17.html?spref=fb
http://ulagathamizharmaiyam.blogspot.nl/2014/08/blog-post_17.html?spref=fb










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக