தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பற்கள் பளிச்சென்று மின்னுவதற்கு

பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்க அதனை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.
பொதுவாகவே கால்சியம் சத்து பற்களுக்கு உறுதியை அளிக்கிறது.
பிரஷ்ஷில் பேஸ்டை வைத்து 5 நிமிடம் தேய்த்து துப்பி விடுவதால், பற்களுக்கு எந்த பெரிய நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.
பற்களை தேய்த்ததும், பல் ஈறுகளை விரலை வைத்து நன்கு அழுத்தி மசாஜ் செய்வது போல தேய்த்து விட வேண்டும்.
அப்போதுதான், ஈறுகளில் தேங்கியிருக்கும் கெட்ட நீர் வெளியேறி, ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.
மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை துலக்கினாலும் பற்கள் நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும்.
* எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.
* பற்களை வெள்ளையாக்கும் பாரம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.
* அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.
* அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.
* ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
* பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் வேப்பங்குச்சியும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக