கடந்த காலங்களை விட தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய அவசியமும் தேவையும் உள்ளது.
வெளியிடங்களை விட வீட்டிலேயே குழந்தைகளுக்கு பல்வேறு அபாய சூழ்நிலைகள் உள்ளது.
தாய்மார்களின் கவனத்திற்கு
* தீப்பெட்டி, ஊக்கு, ஊசி, சிறு நாணயங்கள், பல் குத்தும் குச்சி, பாதி தீர்ந்துபோன கிரேயான் பென்சில்கள், பிளேடு, கத்தரிக்கோல் உட்பட ஆசிட் மற்றும் இதர மருந்து பொருட்களை எல்லாம் குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.
* பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்கார துணிகள் வைத்து தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம்.
* குழந்தைகள் விளையாட்டாக அந்த துணியை பிடித்து இழுத்தால் ஒருகட்டத்தில் தொலைக்காட்சி பெட்டி நழுவி குழந்தையின் மீது விழ நேரிடலாம்.
* வீட்டில் உபயோகப்படுத்தும் டேபிள் ஃபேனின் சுழற்சி குழந்தையின் ஆவலை தூண்டும், பயமறியா இளங்கன்றுகள் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க நேரிடும்.
* வாஷிங் மிஷின் இயந்திரத்தை எந்நேரத்திலும் திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்ட குழந்தை, உள்ளே இறங்கிக் கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
* குளிர்பதனப் பெட்டியின் பிளாஸ்டிக் ஸ்டாண்டு கொஞ்சம் பலவீனம் அடைந்து லேசாக ஆடினால்கூட, உடனே மாற்றிவிடுங்கள். குளிர்பதனப் பெட்டியைக் குழந்தை திறக்க முயற்சிக்கும்போது, அது குழந்தையின் மீதே விழக்கூடும்.
* குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ மின்சார சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையைக் கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளைச் செய்வது நல்லது.
* சுவரில் மாட்டும் அலங்கார பொருட்கள் மற்றும் கடிகாரங்களை குழந்தைகளின் கைக்கு எட்டாத உயரத்தில் உறுதியான ஆணியை அடித்து மாட்டிவிடுங்கள்.
* பால்கனியில் இருந்து வேடிக்கை பார்ப்பதில் குழந்தைகளுக்கு அலாதி விருப்பம், எனவே பால்கனி தடுப்பு சுவர்கள் மற்றும் சன்னல்கள் மீதும் கவனம் தேவை.
* தரைத் தண்ணீர்த் தொட்டிகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள், அதன் மூடி மிகவும் உறுதியாகவும், குழந்தைகள் தூக்க முடியாத அளவுக்கு கனமானதாகவும் இருத்தல் மிகவும் நல்லது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக