தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

ஆண்களுக்கு தோல் புற்றுநோய் ஆபத்து! நிபுணர்கள் எச்சரிக்கை!

நடுத்தர வயது ஆண்களுக்கு தோல் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உடல் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது அதிகமாக கோல்ப் விளையாடுபவர்கள், புல்வெளி, வீட்டுத்தோட்டம் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் என்பவர்களுக்கு இத்தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மெலனோமா எனப்படும் பொதுவாக ஏற்படக்கூடிய தோல் புற்றுநோய் ஆனது 1990ம் ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தற்போது 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக Public Health England தெரிவித்துள்ளது.
இவற்றின் காரணமாக இளம் வயதினரை கவரும் வகையில் சூரியனிலிருந்து பாதுகாப்பு தரும் விடயங்களை சமூகவலைத்தளங்களினூடாக பகிருமாறு உடல் ஆரோக்கிய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக