தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஆகஸ்ட், 2014

தபால் தலையில் சூப்பராக காட்சியளிக்கும் விநாயகர்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளிநாடுகளில் விநாயகரின் உருவம் பொறித்த தபால்தலை, ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரை தபால் தலை சேகரிப்போர் சங்க உதவி தலைவர் ஜி. சக்திவடிவேல் கூறியதாவது, விநாயகர் வழிபாடு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இருந்துள்ளது.
இப்போதும் தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்திலும், இந்தோனேசியாவில் 20,000 ரூபாய் தாளிலும், விநாயகர் உருவம் உள்ளது.
அங்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள் என்றாலும் அந்நாட்டில் இந்துக்கள் அதிகம் வாழ்கிற பாலி தீவில், செல்வத்தின் அதிபதியாக விநாயகர் கருதப்படுகிறார்.
மேலும் லாவோஸ் நாட்டில் விநாயகருக்கு மட்டுமின்றி சரஸ்வதி, பிரம்மா, நாககன்னிக்கும் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக