தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஆகஸ்ட், 2014

காதல் என்றால் என்ன? சூப்பர் விளக்கமளித்த 6 வயது சிறுமி!


பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் காதல் பற்றி வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது இணையதள வாசகர்களை ஈர்த்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த எம்மா (Emma) என்ற 6 வயது சிறுமி தனது புத்தகத்தில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போன்ற ஒன்றில் காதல் என்றால் என்ன? என்பது குறித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
காதல் என்றால் என்ன? என ஆங்கிலத்தில் ஒரு கேள்வியை எழுதிய அவர் கீழே அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது.
ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும், உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என எழுதியுள்ளார்.
கடைசியில் காதலின் குறியீடான இதயம் வரையப்பட்டுள்ளது.மேலும் இவை அனைத்தும் பென்சிலால் எழுதப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளில் உள்ள வசீகரம் காரணமாக பலரால் எம்மாவின் ‘காதலின் பொருள்' விரும்பிப் படிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக