நல்லூர்க் கந்தனின் வருடாந்த உற்சவம் தொடங்கி விட்டாலே யாழ் மக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஒரு உற்சாகம் தானாகவே வரும். இறை பக்தியுடன் நல்லூரான் வீதி மணலிலே குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அமர்ந்திருப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் சுகமும் வேறு எங்கும் கிடைப்பதில்லை.
அதே போன்று ஈழத்து சிறுவர்களும் கலைப் படைப்பாளிகளும் நல்லூரான் மணலில் மணல் சிற்பங்களை உருவாக்கி தாங்களும்மகிழ்வதுடன் பார்ப்பவர்கள் கண்களுக்கு வியப்பையும் ஒர் சந்தோசத்தையும் கொடுக்கின்றனர்.
அந்த வகையில் பல சிற்பங்கள் உருவாக்கியிருந்தாலும் நேற்றைய கைலாச வாகன திருவிழாவில் ஒருவர் பஞ்சமுக கணபதியை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக