தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஏற்றத்தாழ்வுகள் இன்றி அன்பை வெளிப்படுத்தும் உன்னதமான தினம்!


மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும்.
உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டதே உலக மனிதநேய தினம்.
அத்துடன், துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவோருக்காக பணியாற்றுவோர், இப்பணிகளில் ஈடுபடும் போது கொல்லப்பட்டோர், மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூரும் தினமாகவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
2008 டிசம்பர் 11ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.
உலக வரலாற்றை புரட்டி பார்த்தால் மனிதகுலம் பல தடைகளை தாண்டி முன்னேறி வந்துள்ளது.
தொடக்கத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு போன்ற பல்வேறான இயற்கை சீற்றங்களில் இருந்து தம்மை காத்துக் கொண்டு வளர்த்து வந்தான்.
இதற்கடுத்து காட்டு மிருகங்களின் கொடூர தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்து கொண்டான்.
தொடர்ந்து குடும்பமாக சமூகமாக வாழத் தொடங்கியதும், இனம்- நிறத்தின் பெயராலும் இடத்தின் பெயராலும் பிரியத் தொடங்கினர்.
பிறகு தாங்கள் தான் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு வளர ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கி விட்டனர்.
இருப்பினும் அன்புடனும், தன்னலமற்ற பொதுநலத்துடன் மனித நேயத்துடன் மற்ற உயிர்களை காத்து நிற்கும் மனிதர்களும் இருந்த காரணத்தால் தான் மனித குலம் இன்னும் தலைத்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும்.
ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது.
மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள்.
அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக