Oppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo 5 இனை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
4.5 அங்ல அளவு, 854 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Qualcomm Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியில் 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா, 1900 mAh மின்கலம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 190 அமெரிக்க டொலார்கள் ஆகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக