தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பிரபல நடிகைகளுக்கு சாதகமாய் மாறிய வழக்கு

18வயதுக்குக் குறைவான பெண்கள் என தமிழ் திரையுலக நடிகைகள் மீது தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளார்.
18வயதுக்கும் குறைவான பெண்கள் திரைப்படத்தில் நடிக்கத் தடைசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி லட்சுமி மேனன், துளசி, கார்த்திகா ஆகிய நடிகைகளின் மீது தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியதாவது, சிறுமிகளை கதாநாயகியாக நடிக்க வைப்பது சிறார் நீதிச் சட்டத்துக்கும், அகில இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்துக்கும் எதிரானது. ஆதலால்18 வயதுக்குக் குறைவான சிறுமிகளை திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் கூறுகையில், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்ன ஆகவேண்டும் என்ற லட்சியம், கனவுகள் இருக்கும். ஒருவரது நோக்கம் எதுவோ அதன்படி அவர்கள் செயல்படுகின்றனர்.
எனவே அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இவ்வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக