தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

தேரில் திருவீதியுலா வந்த நல்லூர்க் கந்தன் - செல்வச் சந்நிதி ஆலய கொடியேற்றம் நாளை!!


யாழ்ப்பாணத்தின் நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த இரதோற்சவப் பெருவிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி வலம் வந்தார்.
உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூர்க் கந்தன் தேரில் ஆடி அசைந்து வருவதனை கண்டு மெய் மறந்து தரிசித்தனர்.
பக்தர்களின் வசதி கருதி மாநகரசபையினரும், பொலிஸாரும், தொண்டர் அமைப்புக்களும் பல்வேறு ஏற்பாடுகளினைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வச் சந்நிதி ஆலய கொடியேற்றம் நாளை
ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 3 ஆம் திகதி பூங்கா வனமும் 4 ஆம் திகதி கைலாய வாகனமும் 7 ஆம் திகதி சப்பறமும் அதனைத் தொடர்ந்து 8 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.
உற்சவ காலங்களில் பெறு மதிமிக்க ஆபரணங்கள், உடை மைகள் தொடர்பில் அடியார்களை விழிப்பாக இருக்கும் படியும் உற்சவ காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள குடி தண்ணீரை வீண்விரயம் செய்வதை தவிர்க்குமாறும் வாகனம் நிறுத்தும்போது விதி முறைகளைப் பின்பற்றுமாறும் ஆலய பரிபாலனசபையினர் அடியார்களை அறிவுறுத்தியுள்ளனர்.
கோவிலுக்குள் இடம்பெறும் திருட்டுக்களைக் கண்டுபிடிக்க சி.சி.ரி.வி.கமராக்கள் பொருத்தப்படும் என கோவில் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ள போதும் பெண்கள் தங்க நகைகள் அணிந்து வருவதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் சுற்றாடலில் பச்சை குத்துவது, மதுபாவனைக்கு முற்றாக தடைசெய்யப்பட் டுள்ளது. உணவு உட்பட பொருள்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு விலையில் விற்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு விலை யைக் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக