|
பார்த்தவுடனேயே அனைவரும் கவர்ந்திழுக்கும் பறவை தான் டுகான். இதில் ஏராளமான வகைகள் உண்டு.
ஒவ்வொரு இனப்பறவையின் அலகும் ஒரு வண்ணத்தில் இருக்கும்.
இதில் இன்னொரு ஆச்சரிய மான விஷயம் என்ன வென்றால், இந்தப் பறவையின் அலகுகள் அதன் வளர்ச்சிக் கேற்ப நிறம் மாறிக்கொண்டே இருக்கும்.
குஞ்சுகளாக இருக்கும்போது மஞ்சள் நிறமாகவும், இளம் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், சற்று முதுமையடையும்போது சிவப்பு நிறமாகவும் மாறும்.
பிறந்து இறப்பதற்குள் நான்கைந்து தடவையாவது அதன் அலகின் நிறம் மாறி விடும்.
இப்பறவைகள் நீண்ட தூரம் பறக்காது, ஆனால் மரத்துக்கு மரம் தாவும் திறன் பெற்றது.
என்னதான் அழகுகள் கனமாக இருந்தாலும், இதனுள் ஸ்பான்ஜ் போன்று மென்மையாக இருப்பதால் இப்பறவைக்கு வெயிட்டாக இருக்காது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக