தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 ஆகஸ்ட், 2014

ஆபத்து விளைவிக்கும் ’பேஸ்புக் மெசஞ்சர்’ ?


பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது.
இது பலருக்கும் மிகவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது என்ற பரவலான கருத்து மட்டுமே நிலவி வருகிறது.
இது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான்.
டேஞ்சர் ’பேஸ்புக் மெசஞ்சர்’
பலரும் இந்த மெசஞ்சருக்கு நல்ல கருத்துக்களை கூறி வரும் நிலையில் இதைப் பற்றிய ஆபத்தான கருத்துகளும் வெளிவருகின்றன. அப்படி என்ன வருகிறது?
1. நம் நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவதற்கு நாம் பேஸ்புக் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, பேஸ்புக், இன்டர்நெட் அல்லது மொபைல் போன் நிறுவன சேவையின் தன்மையினை மாற்றலாம்.
உங்களுக்கு அறிவிக்கப்படாமலேயே, உங்கள் போனில் உள்ள வசதிகளை, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.
2. பேஸ்புக் நினைத்தால், அது உங்கள் நண்பர்களின் போன்களுக்கு, நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரில், எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பலாம்.
இதில் உள்ள பிரச்சனை உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார்?
நீங்கள் அறியாத ஒருவருக்கு, உங்கள் போனில், நீங்கள் விரும்பாத செயல்களை மேற்கொள்ள அனுமதி கொடுப்பது போலாகிறது இந்த விடயம்.
3. ஓடியோவைப் பதிவு செய்வதும், படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் எடுப்பது இது மிக மோசமானது.
பேஸ்புக் நிறுவனத்தினர், எந்த நேரத்திலும் உங்கள் போனில் நுழைந்து, நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். உங்கள் போனில் உள்ள லென்ஸ் வழியாக உங்களைக் கண்காணிக்கலாம். இவை தான் தற்போது பரவி வரும் ’பேஸ்புக் மெசஞ்சர்’ பற்றிய டேஞ்சர் செய்திகள்.
’பேஸ்புக் மெசஞ்சர்’ ஆபத்தா?
பலருக்கும் பயனளிக்கும் இந்த மெச்ஞ்சர் பற்றிய ஆபத்தான மேலே சொல்லப்பட்டதிற்கு இங்கு அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவது. நீங்கள் மெசேஜ் ஒன்றை அனுப்ப விரும்பினால், போன் முதலில் வை பி இணைப்பில் இருக்க வேண்டும். இதனை பேஸ்புக் நினைவு படுத்துவது நிச்சயம் நெட்வொர்க்கினை மாற்றுவதாகாது.
போன் எண்களை அழைப்பது என்பது மெசஞ்சர் அப்ளிகேஷனில், நீங்கள் விரும்பினால் மட்டுமே அமைக்கக் கூடிய வசதியாகும். அதாவது, நீங்கள் விரும்பினால், இந்த அப்ளிகேஷன் வழியாக எண்களை அழைக்கலாம். பேஸ்புக் மெசஞ்சர் தானாக எந்த அழைப்பினையும் மேற்கொள்ளாது.
எந்த நேரத்திலும் பேஸ்புக் மெசஞ்சர் ஓடியோ மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொள்ளும் என்பது, நீங்கள் கொடுக்கும் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும்.
இந்த அனுமதி கொடுப்பதன் மூலம் நீங்கள் மெசஞ்சர் அப்ளிகேஷனில் இயங்குகையில், கேமராவினை இயக்க முடிகிறது.
எனவே இதன் மூலம் அச்சம் கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகும். பயனளித்து வரும் இந்த ’பேஸ்புக் மெசஞ்சர்’ கண்டிப்பாக ’டெஞ்சர்’ ஆக இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக