தற்போது தம்மைத் தாமே புகைப்படம் எடுக்கும் செல்பி எனும் முறை உலகளவில் விரைவாக பிரபல்யமாகிவருகின்றது.
இந்நிலையில் சோனி நிறுவனம் செல்பிக்களை எடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சைபர்ஷொட் கமெராவினை வடிவமைத்துள்ளது.
Sony Cybershot DSC-KW11எனப்படும் இக்கமெரா 19.2 மெகாபிக்சல்களை உடையதாகக் காணப்படுவதுடன், 180 டிகிரியில் திருப்பக்கூடிய 21 மில்லிமீற்றர் லென்ஸ்ஸினை கொண்டுள்ளது.
இவை தவிர 3.3 OLED திரையினையும், வயர்லெஸ் தொழில்நுட்பமாகிய WiFi இனையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கமெராக்கள் ஆசியக் கண்டத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக