தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய தேரோட்டம்- தெல்லிப்பளை துர்க்கையம்மன் கொடியேற்றம்



வாழைச்சேனைப் பிரதேசத்தில் நூறு வருடங்களுக்கு மேற்பட்ட ஆலயமாக வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேரோட்ட திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 19ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழாவாக இடம்பெற்று 29ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையும்.
ஆலய முன்தெரு மக்களால் இடம்பெறும் இத்தேரோட்டத் திருவிழாவானது ஆலயத்தில் காலை வசந்த மண்டப பூசை இடம்பெற்று பின்னர் பஞ்சமுக விநாயகர் தேரில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் செய்வதற்காக பக்தர்கள் வடம் பிடிக்க ஆலயத்திலிருந்து புறப்பட்டது.
இதன்போது வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு வழியாக சென்று பத்திரகாளியம்மன் ஆலயம், சிவமுத்துமாரியம்மன் ஆலயம் பின்னர் வாழைச்சேனை மாடி வீதி, கல்குடா வீதி, விபுலானந்த வீதி, மீண்டும் கல்குடா வீதி வழியாக வருகை தந்து ஆலயத்தை சென்றடைந்தது.
இதன்போது காவடியாட்டம், கரகாட்டம், கோலாட்டம் என்பன இடம்பெற்றது, இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பக்த அடியார்கள் தங்களுடைய வீட்டின் முன்பாக பூரண கும்பம் வைத்து இறைவனை வழிபட்டனர்.
பின்னர் ஆலயத்தினை சென்றடைந்ததும் பூசைகள் நடைபெற்றதோடு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
மஹோற்சவ பூசைகள் யாவும் யாழ்ப்பாணம் சாம்பாவெளி வீரகத்தி விநாயகர் தேவஸ்தான பிரதம குரு வேதாகம உதயசூரியன் சிவஸ்ரீ.ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
தெல்லிப்பளை துர்க்கையம்மன் கொடி
வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நேற்றைய தினம் வெகு சிறப்பாக ஆரம்பமானது.
நேற்றைய தினம் முற்பகல் 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ளன.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்த கூட்டங்கள் திருவிழாவை காண்பதற்கு வருவார்கள். இதனை ஒட்டி போக்குரத்துப் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக