தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சண்டே ஸ்பெஷல் ரெசிபி- சில்லி பரோட்டா


பரோட்டா என்றாலே எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும், அதுவும் ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற கார சாரமான சில்லி பரோட்டாவுக்கு பலரும் அடிமையா இருப்பாங்க.
எத்தனை நாள்தாங்க இப்படியே ரெஸ்டாரண்டல போய் சாப்பிடுறது, வீட்டிலேயே சுவையான சில்லி பரோட்டா செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பரோட்டா - 8-10 (மெல்லியதாக நீளமாக நறுக்கிக் கொள்ளவும்),
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது),
குடைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 1 கட்டு,
எண்ணெய் - 1/4 கப்,
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் பரோட்டாவை சமைத்து அதனை மெல்லியதாக நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு நன்கு பிரவுன் நிறமாக வரும் வரை வதக்கவும்.
பிறகு குடைமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உப்புச் சேர்த்து பின் நறுக்கிய பரோட்டாக்களை சேர்த்துக் கலந்து கீழே இறக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி பரிமாறலாம்.
இந்த முறையை சப்பாத்திக்கும் பின்பற்றி செய்யலாம், சுவையாக இருக்கும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக