பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன.
இப் பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.
மேலும் உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
* திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும்.
* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
* பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.
* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.
* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்
* உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக