இந்த ராட்சத நட்சத்திரங்கள்தான் ஆதியில் ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும் கலந்து மேலும் கடினமான ரசாயனக் கூறுகளை உருவாக்கக் காரணமாக இருந்தன என்று இந்த ஆய்வில் புதிய தகவல் தெரியவந்துள்ளது.
சில மில்லியன் ஆண்டுகள் என்று அழைக்கப்படுவது பிரபஞ்ச வெளியின் காலம் பற்றிய கோட்பாடுகளின் படி ‘கண் சிமிட்டும் நேரம்’ என்று கூறப்படுகிறது.
இந்த ராட்சத நட்சத்திரங்கள் இந்த அண்டவெளிக் கண்சிமிட்டலில் வாழ்ந்தும் மறைந்தும் இருக்கலாம் என்று ஜப்பான் தேசிய வானவியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி வாக்கோ ஆவோகி தெரிவித்துள்ளார்.
இந்த ராட்சத நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி முதல் மூலக்கூறுகளை உருவாக்கி பிறகு இது பால்வெளி மண்டலம் மற்றும் பிற்கால நட்சத்திரங்களாக பரிணாமம் அடைந்திருக்கலாம் என்ற கோட்பாட்டை இவர்கள் தற்போது முன்வைத்துள்ளனர்.
‘ஸ்டெல்லார் ஆர்க்கியாலஜி’ என்ற உத்தியைக் கொண்டு இத்தகைய ராட்சத நட்சத்திரத்தின் இருப்பை இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
SDSS J0018—0939 என்று அறியப்பட்டுள்ள இந்த ராட்சத நட்சத்திரம், இதற்கு முன்பாக இருந்த ராட்சத நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் உண்டாகிய ரசாயன மூலக்கூறுகளுடன் உருவான வாயுமேகத்தின் மூலமாக தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுகள் பிரபஞ்சம் தோன்றிய விதங்கள் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக