வடமேற்கு மெக்சிகோவில் பூமியில் திடீரென்று பல கிலோ மீற்றருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிளவால் அனைத்து புவியியலாளர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள விவசாய நிலத்தில், 1 கி.மீ. தூரத்திற்கு, 26 அடி ஆழத்தில் திடீரென ஏற்பட்ட பிளவால் காரணம் தெரியாமல் புவியியலாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த பிளவால் அங்குள்ள சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் வேலை பார்க்கும் விவசாயிகள் அனைவரும் சாலையை கடக்க இந்த பிளவினை சுற்றி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த பிளவு கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என பலர் கருதினாலும் இதற்கான நியாயமான காரணத்தை அறியும் முயற்சியில் புவியியலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக