தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

"பெரிய பெருமாள்'

தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்
...
மூலவர் : ரங்கநாத பெருமாள்
உற்சவர் : - அம்மன்/தாயார் : ரங்கநாயகித்தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
தீர்த்தம் : பெண்ணையாறு
ஆகமம்/பூஜை : பழமை : 1000-2000வருடங்களுக்கு
புராண பெயர் : - ஊர் : ஆதிதிருவரங்கம்
மாவட்டம் : விழுப்புரம்
மாநிலம் : தமிழ்நாடு

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம்.

ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக் கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று.சில காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
See More

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக