இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்பட்டு வரும் விவசாயத்திற்கு சுமார் 10,000 ஆண்டுகால வரலாறு இருப்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. |
இயற்கை விவசாயத்தையே பாரம்பரியமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்திய விவசாயிகள், உலகமயமாக்கலின் தாக்கத்தால் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இதனால் காலப்போக்கில் அதீத செயற்கை உர பயன்பாட்டினாலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளாலும் விளைநிலமும், அதில் விளையும் உணவு பொருட்களும், தண்ணீரும் நஞ்சாகத் தொடங்கின. உலகமயமாக்கலால் ஜங் ஃபுட் (JUNK FOOD) என்றழைக்கப்படும் ப்ளாஸ்டிக் பைகளிலும், புட்டிகளிலும் அடைக்கப்பட்ட உணவு வகைகள், குளிர் பானங்கள் மற்றும் துரித உணவு வகைகளும் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருந்தன. நுகர்வு கலாச்சாரத்தை பெரிதும் விரும்ப தொடங்கிய நம் மக்கள், துரித உணவுகளில் உள்ள அதன் செயற்கை சுவையினால் ஈர்க்கப்பட்டு அதனை அதிகமாக உட்கொள்ளத் தொடங்கினர். இன்றைய அவசர வாழ்க்கை நிலையில் குடிநீரை கூட காசு கொடுத்து வாங்கும் வேளையில், ஆரம்பத்தில் இயற்கை ஆர்வலர்களின் குரலுக்கு சிறிதும் செவி சாய்க்காத பொது மக்கள், நாளடைவில் துரித உணவாலும், செயற்கை ரசாயனத்தால் விளையும் உணவினாலும் நாம் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதனை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் சென்னை உட்பட பல ஊர்களிலும் இயற்கை விவசாயத்தினால் தயரிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இவற்றை கொண்டு இயங்கும் இயற்கை உணவகங்களை மக்கள் பெரிதும் நாடத் தொடங்கியுள்ளதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருவது தெரிகிறது. சிவகாசியில் மாறன் ஜி என்பவரால் நடத்தப்பட்ட இயற்கை உணவுகள் பற்றிய பயிற்சி வகுப்புகளுக்கு சென்ற மகாலிங்கம் அங்கு அவர் அறிந்து கொண்டதை வைத்து சைதாப்பேட்டையில் சிறிய முதலீட்டில் இந்த உணவகத்தினை தொடங்கியுள்ளார். இதுபற்றி மகாலிங்கம் கூறுகையில், துரித உணவால் நம் பாரம்பரிய உணவுகளை நாம் மறந்து வருகிறோம், துரித உணவினால் ஏற்படும் பாதிப்புகளை இயற்கை உணவால் மட்டுமே சரிசெய்ய முடியும். எங்கள் உணவகத்திற்கு பெரும்பாலும் அதிகளவில் முதியவர்களே வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இதன் நன்மைகளை எடுத்து கூறினால் கண்டிப்பாக அவர்களும் இதனை விரும்பி உண்ணத் தொடங்குவார்கள். இந்த உணவகத்தின் மூலம் பணம் ஈட்டுவது என்பதை விட, இதன் மூலம் மனதிற்கு ஆத்மார்த்த திருப்தி கிடைக்கிறது. மேலும், இங்கு வாடிக்கையாக உண்ண வருபவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிவதாக கருத்து தெரிவிக்கின்றனர், அது மேலும் எங்களை ஊக்குவிக்குகிறது. பொதுமக்கள் துளசி தேநீர், நெல்லிக் கனி சாறு, கருவேப்பிலை சாறு, மேலும் இனிப்புவகைகளான தேன் அத்தி, தேன் அல்லி, தேன் கடுக்காய் போன்றவற்றை அதிகமாக ரசித்து உண்கின்றனர். மேலும், மக்கள் வெறும் ருசிக்காக உணவு உட்கொள்வதை விடவேண்டும், ரசாய கலப்படத்தால் மட்டுமே அளவுக்கு அதிகமான இனிப்பை வழங்கமுடியும். ஆனால் அவை அனைத்துமே உடலுக்கு தீங்கானது. துரித உணவுகளை விட இந்த இயற்கை உணவுகளில் சுவை சற்று குறைவாக தான் இருக்கும், உண்மையான வாழ்க்கை ருசியை அனுபவிக்க வேண்டுமெனில் இந்த இயற்கை உணவுகளுக்கு பொதுமக்கள் தங்கள் பேராதரவை தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். |
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
இயற்கையின் மடியில் மக்கள்! சென்னையில் ஓர் அதிசய உணவகம் (ஸ்பெஷல் ரிப்போர்ட்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக