தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 29, 2014

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன?


காலங்காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
விஞ்ஞான ரீதியாக பார்த்தால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அதாவது மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தது.
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.
எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது, இது தான் உண்மையான காரணம்.

No comments:

Post a Comment