உலக அதிசயங்களில் ஒப்பற்ற தெய்வீகத் திருக்காட்சியாக, உலகம் யாவையும் தாமுளவாக்கி,இந்தப்பிரபஞ்சம் முழுதும் தன்னை வியாபித்துக் கொண்டு ஆனந்த தரிசனம் தந்து கொண்டிருக்கும் இமாலயத்தின் கைலாசத்தைக் கண்டு இன்புறும் பேறு நம்முள் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்?
நமது ரிஷிகளும் முனிகளும் மாமன்னர்களும் தரிசித்துப் பேறு பெற்ற அந்தக் கைலாசத்தைக் காண நமக்குப் பணம் இருந்தால் மட்டும் போதாது, பாக்கியமும் இருக்க வேண்டும்.
ஈசனின் கருணையும் நாம் செய்த புண்ணியங்களின் பலனும் கை கூடி இருந்தால் ஒழிய அவன் குடி கொண்டிருக்கும் திருவிடத்தைத் தேடிச் சென்று தெய்வீகக் காட்சியாகக் காணும் பேறு நமக்குக் கிடைக்காது. அப்படியெல்லாம் இல்லாமல் இந்தப் புகைப்படங்களின் மூலம் அந்தக் கைலாஷ்பதி குடி கொண்டிருக்கும் அருள் தோற்றத்தை கூகுள் மேப் மூலம் திருமதி உஷா அவர்கள் தரிசித்திருக்கிறார்.
தான் பெற்ற இன்பத்தை இவ்வுலகெல்லாம் பெற்று நெகிழ வேண்டும் என்பதற்காக கூகுள் மூலம் தான் மட்டுமே பெற்ற கைலாஷ் நாதரின் தோற்றத்தை புகைப்படமாக ஆன்மீக விருந்து படைத்துள்ளார். மயன் என்னும் தேவசிற்பி செதுக்கிய முகம்போல் கைலாச முகடுகளுக்கு நடுவே ஓர் முகடை சிவபெருமானின் திருமுகமாக வடித்ததுபோல் தோன்றும் கைலாஷ் பதியின் காட்சி, நம்புவோரை மெய்சிலிர்க்க வைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக