தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

உலாவரும் ஆவி! மக்களை அச்சறுத்தும் செயின் மரம்!


வயநாடு பகுதியில் சுற்றுலா தளம் சென்றாலே நாம் பார்க்க வேண்டியது செயின் மரம் தான்.
காலனிய ஆட்சியில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் உள்ளூர் ஆதிவாசி இளைஞனின் துணையுடன் வயநாடு பகுதியை சிரமப்பட்டு அடைந்துள்ளார்.
ஆனால் ஒரு அழகிய மலைப்பிரதேசத்தை கண்டுபிடித்த பெருமை யாவும் தனக்கே சேரவேண்டும் என்ற எண்ணத்தில் திரும்பும் வழியில் அந்த பொறியாளர், வழிகாட்டி இளைஞனை கொன்று விடுகிறார்.
அப்படி கொல்லப்பட்ட இளைஞனின் ஆவியானது நெடுநாள் இப்பகுதிக்கு வரும் மக்களை அச்சுறுத்தியவாறு இருந்துள்ளது.
இறுதியில் ஒரு பூசாரி தன் சக்தியின் மூலம் அந்த ஆவியை இங்குள்ள அத்தி மரத்தில் ஒரு செயினால் கட்டிவைத்து விட்டார். எனவே அந்த அத்தி மரத்திற்கு செயின் மரம் என்ற பெயர் நாளடைவில் ஏற்பட்டு விட்டது.
இன்றும்கூட ஒரு செயினை (சங்கிலி) இந்த அத்தி மரத்தில் தொங்குவதை பார்க்கலாம்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள வயநாடு பகுதிக்கு உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதிலும் மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை வயநாட்டின் இயற்கையழகு பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக