
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஸ்டெம்ஸ் செல் மூலமான மருத்துவ சிகிச்சை மூலம் அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களால் இந்த தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர்களின் கருத்துப்படி பக்கவாத நோய்க்கு மூளைப்பகுதியில் இரத்தம் கட்டியாவதே காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு இரத்தம் கட்டியாவதற்கு இரத்த நாளங்களில் ஏற்படும் சிதைவுகள் காரணமாக இருப்பதனால், அவற்றினை ஸ்டெம் செல்களைக் கொண்டு பிரதியிட்டு பக்கவாத நோய்க்கு தீர்வு காண முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக