களமிறங்கிய நெய்மர்
உலகக்கிண்ணத் தொடரில் காயமடைந்த நெய்மர் உடல் தகுதி பெற்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.
காஸாவை காப்பாற்றுங்கள்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட மொயீன் அலி ” சேவ் காஸா” என்ற பேண்ட் அணிந்து விளையாடி சலசலப்பை ஏற்படுத்தினார்.
தங்கமகள்களுக்கு உற்சாக வரவேற்பு
காமென்வெல்த்தில் ஸ்குவாஸ் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா மற்றும் ஜோஸ்னாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெயவர்தனேயை வரவேற்ற வீரர்கள்
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஜெயவர்தனே இந்த தொடரோடு ஓய்வு பெறப்போவதை தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடக்கத்திலே மூன்று முட்டை
இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது டெஸ்ட் தொடரின் தொடக்க ஆட்டத்திலே 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது இந்திய அணி. 8 ஓட்டங்களிலே 3 வீரர்கள் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறினர்.
மீண்டும் கலக்க வருகிறார் செரினா
கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் செரினா வில்லியம்ஸ்சால் விளையாட முடியவில்லை மீண்டும் அவர் டென்னிஸ் போட்டியில் களம் இறங்குவதாக தனியார் தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளார்.
சாதனை படைத்த பிராட்
இந்தியாவுக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பிராட் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 9 ஆகஸ்ட், 2014
கடந்த வார நிகழ்வுகள்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக