தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்த காமென்வெல்த் கொண்டாட்டம்


ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. யூலை 23 முதல் ஆகஸ்ட் 3 வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற்ற கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
இந்த 20வது காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 71 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு பதங்களை அள்ளினர்.
முதல் இடம்
இப்போட்டிகளின் முடிவில், 58 தங்கம், 59 வெள்ளி, 57 வெண்கலம் என மொத்தமாக 174 பதக்கங்களை குவித்த இங்கிலாந்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இரண்டாம் இடம்
அவுஸ்திரேலியா மொத்தம் 137 பதக்கங்களை வென்று இடண்டாவது இடத்தை பிடித்தது. இதில், 49 தங்கம், 42 வெள்ளி, 46 வெண்கலம் அடங்கும்.
மூன்றாம் இடம்
கனடா 32 தங்கம், 16 வெள்ளி, 34 வெண்கல பதங்கங்களுடன் மொத்தம் 82 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தையும் பெற்றது.
ஐந்தாவது இடத்தில் இந்தியா
டெல்லியில் 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை குவித்து முதல் முறையாக 2வது இடத்தை பெற்றது.
ஆனால் இந்த முறை காமென்வெல்த்தில் இந்தியா 64 பதக்கங்களை வென்று 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.
சிறப்பு விருதுகள்
இப்போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. வரும் 2018ல் அவுஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடத்தப்படுவதை தெரிவிக்கும் விதத்தில் காமன்வெல்த் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கொடிகள் ஒப்படைக்கப்பட்டது.
1,380 பதக்கங்கள்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலா 100 கிராம் எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 1,380 பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இசை மழை
இதைதொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பொப் பாடகி மினோக்கின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஹம்ப்டன் அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி காண்பித்தனர்.
இறுதியாக ஸ்காட்லாந்து பொப் பாடகி லுாலுா அந்நாட்டின் 'சூட்' பாடலை பாட ரசிகர்கள், பணியாளர்கள், வீரர், வீராங்கனை என அனைரும் மைதானத்தில் நடனமாட மைதானத்தின் வெளியே வண்ணமயமாக வாணவேடிக்கையுடன் விழா கோலாகலமாக முடிவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக