தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

வலிக்கும் உண்மைகள்


* செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி, பூஜை போட்டு, பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* மாமா பொண்ணு, அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
* ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பார்த்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக