உடல் பளபளப்பாகி, சுருக்கம் மறைய வேண்டுமா? ஒயின் குளியல் போடுங்கள் (வீடியோ இணைப்பு)
ஜப்பானிய மக்கள் புத்துணர்ச்சியோடு இருக்கவும், உடல் பளபளப்பாகவும் ஒயின் குளியல் போட்டு வருகின்றனர்.
ஜப்பானில் உள்ள ஹக்ஒன் நகரில் யூனி சன் ஸ்பாவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒயின் நீச்சல் குளத்தில் குளிக்க ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.
இந்த ஒயின் நீச்சல் குளத்தில் குளிப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைகிறது என வாடிகையாளர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஒயின் நீச்சல் குளத்தில் ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் மிக ஆர்வமுடன் நீச்சல் அடித்து மகிழ்கிறார்கள். ஒயினில் ஆக்சிஜனேற்றி எதிர்ப்பு கலந்து உள்ளதால் உடல் சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்க தினமும் புதிய சிவப்பு ஒயின் இந்த நீச்சல் குளத்தில் ஊற்றப்படுகிறது.
க்ரீன் டீ குளியலால் உங்கள் சருமம் சுருக்கம் இன்றி இளமையாக காட்சி அளிக்கிறது.
புதிய சூடான காபி நீச்சல் குளத்தில் குளிப்பதால் தோல் எதிர்ப்பு சக்தி பெருகிறது என நம்பப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக