தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 ஆகஸ்ட், 2015

மர்மங்கள் நிறைந்த கூனி நதி!


நதி எப்போதும் புனிதத்தின் அடையாளமாக பார்க்கப்படும் ஒன்று. எத்தனை பாவங்கள் செய்தாலும் நதியில் குளிக்கும்போது பாவங்கள் மூழ்கிவிடும் என்பது நம்பிக்கை.
ஆனால் பாவங்களுக்கு பதில் மனிதர்களே மூழ்கினால்? ஆம் அப்படிப்பட்ட ஒரு நதிதான் கூனி 
இந்தியாவின் டெல்லியில் உள்ள ரோகினி நகரில் தான் இந்த நதி பாய்கிறது.
இந்த நதி மிகவும் ஆபத்தான ஒன்று என்றும் இந்த நதி ஒருவித அமானுஷ்ய தன்மையுடையது என்றும் கூறப்படுகிறது.
அதன்படி இந்த நதியில் இறங்கியவர்கள் பலர் திரும்பி வந்ததில்லை என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீரில் இறங்குபவர்களை ஒரு வித அமானுஷ்ய சக்தி நீரினுள் இழுத்துகொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வருபவர்களும் நீச்சல் தெரியாதவர்களுமே இந்த கூனி நதியில்  மூழ்கி இறந்துள்ளதாக மற்றொரு தரப்பினர் கூறுகின்றார்.
எனினும் இந்த நதியில் இறங்கும் மக்கள் எவ்வாறு இறக்கின்றனர் என்ற உண்மை காரணம் மட்டும் இதுவரை யாருக்கும் பதில் தெரியாத புதிராகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக