அதிக நேரம் வேலை செய்வதால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 6.03 லட்சம் பேரிடம், தொடர்ந்து 8.5 ஆண்டுகள் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் வாரம் 35-40 மணி நேரம் வேலை செய்தவர்களை விட, வாரம் 55 மணி நேரத்துக்கு மேலாக வேலை பார்த்தவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் வருவது 13 சதவீதம் அதிகரித்திருந்தது.
மேலும் 5.28 லட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 55 மணி நேரம் வேலை பார்த்தவர்களுக்கு பக்கவாதம் தொடர்பான பிரச்சனைகள் வருவது 1.3 மடங்கு அதிகரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக