தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

6 வருடங்களாக அதிகரித்துள்ள மனிதர்களின் ஆயுட்காலம்

சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் ஊடாக மனிதர்களின் ஆயுட்காலம் ஆறு வருடங்களால் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Global Burden of Disease எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 1990 ஆம் ஆண்டுகளில் சராசரியாக 65.3 வருடங்களாகக் காணப்பட்ட மனித ஆயுட்காலமானது தற்போது 71.5 வருடங்களாக
காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தசாப்தங்களில் எய்ட்ஸ் மற்றும் மலேரியா போன்ற உயிர்க் கொல்லி நோய்களுடன் போராடக்கூடிய வகையில் மருத்துவ உலகில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் Japan, Singapore, Andorra, Iceland, Cyprus, Israel, France, Italy, South Korea, Canada ஆகிய நாட்டிலுள்ளவர்கள் உயர் ஆரோக்கியம் உடையவர்களாகவும், Lesotho, Swaziland, Central African Republic, Guinea-Bissau, Zimbabwe, Mozambique, Afghanistan, Chad, South Sudan, Zambia ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த ஆரோக்கியத்தை உடையவர்களாகவும் காணப்படுவதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக