தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஆகஸ்ட், 2015

தினம் ஒரு நெல்லிக்காய்.. நன்மைகளோ ஏராளம்!

நெல்லிக்காயில் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.
இவை சரும பிரச்சனை, முடிப் பிரச்சனை மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும், ரத்த சோகை, ஞாபக மறதி போன்றவற்றையும் நீக்குகிறது.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:-
1) நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2) தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
3) உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் தினமும் நெல்லிக்காய் சாப்பிடலாம். இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்க உதவும்.
4) நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது தீர்வாக அமைகிறது.
5) நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
6) நெல்லிக்காயில் வைட்டமின் சி வளமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும். இதில் உள்ள ஆன்டி- ஆக்சிடண்ட் கண் ரெட்டினாவை பாதுகாக்கிறது.
7) நெல்லிக்காய் இரத்தக்குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
8) 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வந்தால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
9) நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து புதிய இரத்த செல்களை உருவாக்கி, மறைமுக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
10) உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக