தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

உலகின் மிகச் சிறந்த திறந்தவெளி அரங்கம் ’மெக்ஸிகோ ஸொகலோ’ (வீடியோ இணைப்பு)



சமவெளியாக இருந்த பூமியில், பிரம்மாண்டமான கட்டிடங்களின் செறிவான உருவாக்கத்தால் அழகிய நகரங்கள் தோன்றின.
அதே சமயத்தில், அந்த செறிவான காங்கிரீட் காடுகளுக்குள் ஒரு சமதளமான திறந்தவெளி அரங்கம் இருந்தால், அந்த நகரவாசிகளை ஈர்ப்பது மட்டுமல்ல. சுவாசித்து இளைப்பாறுகிற சுதந்திர பூமியாகவும் அது பார்க்கப்படுகிறது.
பெருங்கூட்டம் திரளும் சடங்குகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை என்றே நகரங்களின் நிலை கருதப்படுகிறது.
ஸொகலோ என்பது நகரின் மையப் பகுதியில் உள்ள சதுர வடிவிலான பெரிய மைதானமே ஆகும்.
மெக்ஸிகோவில் உள்ள இந்த ஸொகலோ உலகப் புகழ் வாய்ந்தது காலனித்துவ காலத்திலிருந்தே இது அஸெடெக் நகரத்தின் முக்கிய சடங்குகள் நடக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இது முக்கிய சதுக்கம் அல்லது ஆயுத சதுக்கம் என்றே முன்பு அழைக்கப் பட்டு வந்தது. இதன் அலுவல் பெயர் ப்ளாசா டி லா கான்ஸ்டிடூசன் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சதுக்கத்தின் பரப்பளவு 57,600 சதுர மீட்டர் ஆகும். இதன் வடக்கே கதீட்ரலும்,, கிழக்கே தேசிய அரண்மனையும், தெற்கே மத்திய மாவட்ட கட்டிடமும், மேற்கே பழைய போர்டல் மெர்சிடெர்சும் எல்லைகளாக உள்ளன.
1970 ம் ஆண்டில் இதன் தளத்துக்கு, இளஞ்சிவப்பு (Pink) உருளைக் கற்கள் பதிக்கப்பட்டது. இதன் அருகில் அழகிய சிறிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
இதன் நடுப்பகுதியில் உயரமான மெக்ஸிகோ கொடிக்கம்பம் உள்ளது. இதில் தினமும் கொடி ஏற்றி இறக்கப்படுகிறது. இந்த கம்பத்தைச் சுற்றிலும் அழகான புற்கள் விதைத்து வளர்க்கப்பட்டுள்ளது.
இந்த சதுக்கம், மெக்ஸிகோ நகரின் மொத்த மக்களின் தாங்கு தளமாகவே நிகழ்ச்சிகளின்போது பங்கெடுத்துக்கொள்கிறது. உலகில் உள்ள நகரின் சதுக்கங்களில் இதுவே பெரியதாகவும் உள்ளது.
ஆண்டு முழுவதுமே குடிமை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இந்த சதுக்கத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு அறிவிப்புகள், ராணுவ அணிவகுப்பு, சுதந்திர தின விழாக்கள், புனித வாரம், கார்பஸ்டீ கிறிஸ்டி திருவிழாக்கள், நவீன சமய நிகழ்ச்சிகள், பதவி பிரமாணம், பிற நாட்டு தலைவர்களுடனான சந்திப்பு, அரசு எதிர்ப்பு, அரசு ஆதரவு என எல்லா வகை நிகழ்ச்சிகளும் நடைபெறும் இடமாக அமைந்துள்ளது. ஸொகலோவும் அதனை சுற்றியுள்ள பகுதியும் மெக்ஸிகோவின் இதயத் துடிப்பாகவே 700 ஆண்டு பழமையோடு விளங்குகிறது.
இந்த ஸொகலோ பல அவதாரங்களே எடுத்து வந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் மாற்றம் கண்டிருக்கிறது.
ஸொகலோ மெட்ரோ நிலையத்தின் உள்ளே, பல்வேறு கால கட்ட மற்றும் பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட சதுக்கத்தின் தோற்ற மாதிரிகள் இருப்பதை பார்க்கலாம்.
சதுக்கத்தின் வடகிழக்கே டெம்ப்லோ மேயர் என்ற பகுதி உள்ளது. இது அஸ்டெக் மக்களின் கதை மற்றும் புராணங்களின் படி பிரபஞ்சத்தின் மையமாக கருதப்படுகிறது.
ஒரு நிலையத்தில் கூட்டம் நடத்துகிற இடமாகவே, ஸொகலோவை அறிவியல் புனை கதை தொடர்களில் பாபிலோன் 5 பயன்படுத்துகிறது.
1968 ம் ஆண்டில் ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டப் போட்டியின் துவக்கப் புள்ளி இந்த மைதானம்தான்.
உலகப் புகழ்பெற்ற பாடகர்கள் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவும் இது பயன்படுகிறது. 2005 ல் நடந்த, காபே டகுபா ட்ரூ நிகழ்ச்சியில் 100,000 பேர் இந்த சதுக்கத்தில் குழுமியிருந்தனர்.
மெக்ஸிகோவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் நடந்த கொலம்பியாவின் சூப்பர் ஸ்டார் ஷகிரா ட்ரூ நிகழ்ச்சிக்கு 210,000 பேர் கூடினர். என்பதும் இதன் பரப்பளவின் பெருமையை உலகுக்கு பறைசாற்றுவதே ஆகும்.
வெறும் திறந்தவெளியாக இருந்தே தன்னுடைய அவசியத்தை ஒரு நாட்டுக்கு உணர்த்திய, இந்த அரங்கம் போற்றுதலுக்கு உரியதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக