தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, August 26, 2015

ஆவிகளின் வசிப்பிடமா ஜமாலி கமாலி மசூதி?

முகாலியர்கள் கட்டிடக்கலை என்றாலே தாஜ் மகால், குதுப் மினார் தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் குதுப் மினாருக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல என்று சொல்ல வைக்கும் சிறப்புடையதுதான் ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை. 
டெல்லியின் மெஹ்ரவுலி பகுதியில் உள்ள ஒரு புராதான கிராமத்தில் தான் ஜமாலி கமாலி மசூதி மற்றும் கல்லறை அமைந்துள்ளது. இந்த மசூதி 1528-29 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஜமாலி என்ற சொல் உருது வார்த்தையான ஜமால் என்பதில் இருந்து பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு அழகு என்று அர்த்தம். முகமதியர்களின் காலத்தில் வாழ்ந்த சுஃபி துறவியான ஷாயிக் ஃபக்லுல்லா தான் ஜமாலி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
அவரது கவிதைகள் மற்றும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளின் அழகுகள் ஆகியவற்றால் பலரையும் மயங்கவைத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் இங்கு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இதே போல் கமால் என்ற வார்த்தைக்கு அதிசயம் என்று அர்த்தம்.
ஒரு வேளை அது அவரது சீடனாக இருக்கலாம், மாணவராகவே, நண்பராகவே கூட இருக்கலாம். எனினும் அந்த கமாலி யார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாகும்.
சிலர் கமாலி என்பது ஜமாலியின் மனைவி என்று கூறுகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் மிருகங்களின் அழுகை மற்றும் வித்தியாசமான ஓசைகள், தோன்றி மறையும் வெளிச்சங்கள் என்று பல விசித்திரமான செயல்கள் நடப்பதாக கூறுகின்றனர்.
மேலும் நமது அருகில் யாரோ ஒருவர் உடன் இருப்பது போன்றே தோன்றுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் கண்ணுக்கு தெரியாத ஒரு உருவம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கன்னத்தில் அறைந்துவிடுகிறது என்றும் கூறுகின்றனர்.
எனினும், இது அனைத்தும் கட்டுக்கதை, சுற்றுலா பயணிகளுக்கு திகில் சுற்றுலாவை ஏற்பாடு செய்து பணம் சம்பாதிப்பதற்காகவே சிலர் இவ்வாறு செயல்படுகின்றனர் என்றும் ஒரு சாரர் கூறியுள்ளனர்.
மிக சிறப்பாக முகாலிய கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ள இந்த மசூதியின் பக்கம் மக்கள் வர பயப்படுகிறார்கள் என்பது காலத்தின் அவலம்.

No comments:

Post a Comment