தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

எந்த உடலுக்கு என்ன மாதிரியான ஆடைகள் அணியலாம்!

குண்டாக இருப்பவர்களுக்கு தங்கள் ஆடை விடயத்தில் கூடுதல் கவனம் தேவை.
ஏனெனில், தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற ஆடைகளை தெரிவு செய்து அணிந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும், இல்லையென்றால் அதுவே அலங்கோலமாக காட்டிவிடும்.
குண்டாக இருப்பவர்கள் வழுவழுப்பான ஆடைகளை தவிர்ப்பது நல்லது, காரணம் அவ்வகையான ஆடைகள் உடலோடு ஒட்டி, உடல் பாகங்களை வெளிப்படையாக காட்டும்.
இது பார்ப்பவர்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தும், எனவே காட்டன் ஆடைகளை உடுத்துங்கள்.
சுடிதார் அணியும்போது, தொள தொளவென அணியக்கூடாது, அதேபோல் குறிப்பாக குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள் மிகவும் இறுக்கமாகவும், இடுப்புபகுதியில் அளவு குறைத்து ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டுவரும்படி இருக்க வேண்டும்.
மிகவும் இறுக்கமாக இருந்தால் பின்புறம் அசிங்கமாக இருக்கும், எனவே இடை பகுதியில் கொஞ்சம் கவனமெடுத்து சுடிதார் அணியவேண்டும்.
ஒல்லியாக உள்ளவர்கள் மிகவும் மெல்லிய ஆடையை தவிர்க்க வேண்டும், இவை உடலை மிகவும் ஒல்லியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும்.
சுடிதார் அணியும் போது கையின் அளவு ரொம்ப குறைவாக வைக்க கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீண்டதாக காட்டும்.
தெரிவு செய்யும் உடை திக்கான உடையாக பார்த்துக்கொள்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக