திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலையில் பெரு முட்டம் என்ற சிறிய கிராமத்தில் நூற்றுக்கணக்கான “கல் திட்டைகள்” சிதைக்கப்பட்டு வருவதாக தொல்லியல் ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் கூறுகையில், பெருமுட்டம் மலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல் திட்டைகள் உள்ளது தெரிய வருகிறது.
இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக, இதுபோன்ற கல் திட்டைகளை பண்டைய மனிதர்கள் உருவாக்கி உள்ளனர்.
அதன் காலம், கி.மு.1,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது.
6 அடி நீளமும், 4 அடி அகலமும் உள்ள பெரிய கல் திட்டைகள் மற்றும் 2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள சிறிய கல் திட்டைகள் உள்ளன.
பூமிக்கு மேலே உள்ள பாறையின் மீது பல கல்திட்டைகளும், பூமிக்கு கீழே பலகை கற்களை கொண்டு கல்லறை வடிவிலும் கல்திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்லறையை சுற்றி உருண்டை கற்களை அடுக்கி கல் திட்டைகளை உருவாக்கி உள்ளனர்.
பாறைகளுக்கு தீயிட்டு இயற்கையான முறையில் பாறைகளை பிரித்துள்ளனர்.
பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது, இந்த பகுதியில் தங்கி சென்றதாக மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். அதனாலேயே பாண்டவர் குட்டை என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க கல் திட்டைகளில் உள்ள கற்களை, வீடு கட்டும் பணிக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக