தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

பார்த்த நொடியில் பிரமிப்பை ஏற்படும் "பாங்காக்" அரண்மனை (வீடியோ இணைப்பு)


ப்ரா போரம் மஹா ரட்ச வாங்’ என்று ’தாய்’ மொழியில் அழைக்கப்படும் ஒரு பெரிய அரண்மனைதான், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அதன் அடையாளமாகவும் இதயமாகவும் திகழ்கிறது.இது போன்ற பெரிய அரண்மனைகள், பல நாடுகளில் இருக்கவே செய்கின்றன.
ஆனாலும் பாங்காக் அரண்மனையின் தனிச்சிறப்பே அதன் கட்டடக்கலை நுட்பம்தான். ஆயிரம் அரண்மனைகளை நாம் பார்த்திருந்தாலும் பாங்காக் அரண்மனையை பார்க்கையில் வியக்கவே செய்வோம்.
பாங்காக் செல்பவர்கள் அரண்மனையை தவிர்த்து, அங்கு எத்தனை இடங்களை சுற்றிப் பார்த்தாலும் முழுமை பெறாது. இந்த அரண்மனை சோவா ப்ரேயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்த பெரிய அரண்மனை 1782 ம் ஆண்டில் கட்டப்பட்டு, சியாம் (இன்றைய தாய்லாந்து) அரசர்களின் இருப்பிடமாகவும் நீதிமன்றமாகவும் 1925 ம் ஆண்டு வரை இருந்துவந்துள்ளது.
தற்போதைய மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (Ram IX) சித்ரலடா அரண்மனையில் தங்கியுள்ளார்.
20 ம் நூற்றாண்டுக்குப் பிறகு, தாய் மன்னர் இந்த அரண்மனையில் வசிப்பதை தவிர்த்துவிட்டார். ஆனாலும், மன்னர் வீட்டு விஷேசங்கள், அரசாங்க சடங்குகள் அரண்மனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில் நடக்கும் வழக்கம் இன்னும் உள்ளது.
வடிவத்தில் குத்துமதிப்பான செவ்வக வடிவம் கொண்ட இவ்வரண்மனை. 218,400 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
நான்கு மதில்களால் எல்லைகளாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இப்போது இது இருக்கும் மாவட்டத்தின் பெயர் ப்ரோ நகோன்.
வடக்கே, சனம் லாங் மற்றும் நா ப்ரா லன் சாலைகளும் மேற்கே மஹாராஜ் சாலையும் கிழக்கே சனமாட்சி சாலையும் தெற்கே தாய் வங்க் சாலையென எந்த திசையிலிருந்தும் எளிதாக அடையும் வகையில், இந்த பெரிய அரண்மனை முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.
மரகத புத்தர் கோவில்
பெரிய அரண்மனையின் வளாகத்துக்குள் மனதை தொடும் பல கட்டடங்கள் கலைவடிவங்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது. ’வட் ப்ர கேவ்’ என்று அவர்களுடைய ’தாய்’ மொழியில் அழைக்கப்படும், மரகத புத்தர் கோவில்தான்.
புத்த மதம்தான் இங்கு பிரதானமானது. இங்குள்ள புத்தருக்கு அங்கிகள் மாற்றுகிற சடங்குகள் நடத்த, ஏற்ற பருவத்தில் அங்குள்ள காலண்டரில் மன்னர் ஹச்.எம். விருப்பப்படி மாற்றம் செய்யப்பட்டது.
இந்த அரண்மனை, ரத்தனகோசின் தீவில் உள்ள ஆயுத்தய அரண்மனை போல தீட்டப்பட்டது. தாய்லாந்தின் முன்னால் தலைநகராமாக இருந்த சியாம் பர்மியர்கள் படையெடுப்பால் பாதித்தது.
இந்த அரண்மனையின் வளாக முகப்பில் ஒரு நீதிமன்றம் உள்ளது. மன்னர் அங்கு நேரடியாகவே சமூக குற்றங்கள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கருவூலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உள் நீதிமன்றமும் உள்ளது.
மரகத புத்தர் ஆலயம் யூரோப்பிய மக்களால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளாக நிறைய பேர் வந்து செல்கின்றனர். குறிப்பாக கூரைதான் எல்லோரையும் சுண்டி இழுக்கிறது.
அதுக்கு அடுத்து சிறப்பாக உள்ளது. போரோமபிமன் ஹால், அமரிந்த ஹால், மன்னர் ராம் இருப்பிடம் மற்றும் மன்னரின் நீதி வழங்கும் ஹால் ஆகியவை ஆகும்.
ராயல் வரவேற்பு ஹால்
இதில் மேற்கத்திய பாணியில் பெரிய சிங்காசனம் உள்ளது, ஐரோப்பிய கலைநயத்தில் பெரிய ஹாலும் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இங்குள்ள மியூசியத்தில் அரசு சம்பந்தமான தாய் வரலாற்றை பிரதிபலிக்கும் நாணயங்கள், ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற பல பொருள்கள் காணப்படுகின்றன.
பெரிய அரண்மனை வளாகத்தில் உள்ள சக்ரி மஹா ப்ரசாத் என்ற பிரம்மாண்ட கட்டடம் 1882 ம் ஆண்டுதான் கட்டப்பட்டது.
இந்த அரண்மனை ஒரே கட்டடமாக இல்லாமல் அரங்குகள், திறந்த புல்வெளிகள், கூடாரங்கள், நீதிமன்றங்கள், தோட்டங்கள் என பல பகுதிகளாக வளாகத்துக்குள் உள்ளன.
இவைகள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் கட்டப்படவும் இல்லை. பல அரசர்களால் கட்டப்பட்டது. கட்சிகளுக்குள் சமச்சீரின்மை, கருத்துகளில் பன்முகத்தன்மையும் நிலவியதால் அரசர்களும் தொடர்ந்து ஆட்சி செய்யவில்லை. என்பது இதன் வரலாறு சார்ந்த தகவலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக