தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

தினமும் தலைக்கு குளிக்கலாமா?



இரண்டு மருத்துவகுறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
தினமும் தலை குளிக்கலாமா?
'ஹைப்பர்ஹிட்ரோசிஸ்' என்ற வியர்வைப் பிரச்சனை இருந்தால் தவிர, தலைமுடியை தினமும் அலச வேண்டுமென்ற அவசியமில்லை.
நாம் பயன்படுத்தும் 'ஷாம்ப்'புகளில் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவை தலைமுடிகளில் உள்ள எண்ணெய் பசைகளை நீக்குவதோடு, தலைமுடியை அளவுக்கு அதிகமாக உலர வைத்து விடும், இது நல்லதல்ல!
எனவே, வாரத்திற்கு மூன்று முறை தலைமுடியை அலசினால் போதும். அதிலும், சாதாரண நீரில் கழுவுதல் போதுமானது. எண்ணெய் தன்மையுள்ள பொடுகுகளை நீக்க, ஆலிவ் எண்ணெயில் தலைமுடியை, 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து, அதற்கு பின், சூடான நீரில் நனைத்த டவலை தலையில் சுற்றி, சிறிது நேரத்திற்குப் பின் முடியை அலச வேண்டும்.
நகங்களில் குழி விழுகிறதா?
நகங்களில் குழி விழுந்தால் சோரியாஸிஸ் இருக்கிறது என்று அர்த்தம். இது ஒரு மோசமான தோல் வியாதி.
இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக